--- --:--:-- --

65 வயது முதியவரை அடித்து சிறுநீரை குடிக்க வற்புறுத்திய கொடூரம்..!

12

உத்திரபிரதேசத்தில் 65 வயது முதியவரை அடித்து மிரட்டி வலுக்கட்டாயமாக சிறுநீர் குடிக்க வற்புறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த மாநிலத்தின் லலித்பூர் கிராமத்தில் 65 வயது முதியவர் வசித்து வருகிறார்.

 

அதே ஊரை சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட வாய் தகராறில் முதியவரின் மகன் தாக்கப்பட்டது குறித்து கடந்த வாரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து சோனி யாதவ் முதியவரையும் அவரது மகனை தாக்கியதோடு தனது சிறுநீரை குடிக்குமாறு கூறி முதியவரை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

 

அவர் மறுப்பு தெரிவிக்க கட்டையால் ஈவு இரக்கமின்றி தாக்கியுள்ளார். அதோடு விடாமல் கோடாரியால் முதியவரின் மகனையும் அந்த நபர் தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து முக்கிய குற்றவாளியுடன் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon