--- --:--:-- --

தமிழகத்தில் 2-வது நாளாக 5 ஆயிரத்திற்கு கீழாக கொரோனா பாதிப்பு.. இன்று 4666 பேருக்கு தொற்று உறுதி., உயிரிழந்தோர் 57 பேர்

17a526f0-4259-4dcb-b58d-871c75156c46

தமிழகத்தில் 2-வது நாளாக 5 ஆயிரத்திற்கு கீழாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இன்று மேலும் எண்ணிக்கை குறைந்து பாதிப்பு 4666 ஆகவும், உயிரிழப்பு 57 ஆகவும் பதிவாகியுள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த மார்ச்சில் தொடங்கி படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்தது. கடந்த ஜூலை மத்தியில் உச்சம் தொட ஆரம்பித்த பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்து, தினசரி பாதிப்பு 8 ஆயிரம், 9 ஆயிரம் என உச்சத்திற்கு சென்றது. பின்னர் கடந்த ஒரு மாதமாக 5 ஆயிரத்திற்கு மேல், 6 ஆயிரத்திற்கு கீழ் என்ற அளவிலேயே இருந்தது. இப்படியே 82 நாட்களாக 5 ஆயிரத்திற்கு மேலாக பாதிப்பு பதிவாகி வந்த நிலையில் நேற்று தான் 5 ஆயிரத்திற்கு கீழாக 4879 பேருக்கு தொற்று என நேற்று பதிவானது. இந்நிலையில் இன்று மேலும் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

 

இன்றைய பாதிப்பு நிலவரம் தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

 

தமிழகத்தில் இன்று 4666 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக உயர்ந்துள்ளது. இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் 5117பேர் ஆவர். இன்று மட்டும் உயிரிழந்தவர்கள் 57 பேர் என்ற நிலையில் மொத்த உயிரிழப்பு 10 ஆயிரத்து 371 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 84.88 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

 

சென்னையில் மட்டும் இன்னும் பாதிப்பு குறைந்தபாடில்லை. நேற்று 1212 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 1164 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 84 லட்சத்தை கடந்துள்ளது.

 

சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தொடர்ந்து அதிகபட்ச பாதிப்பு பதிவாகி வருகிறது. இன்று கோவையில் 398, சேலம் 277, திருவள்ளூரில் 236 பேருக்கு என மாவட்டங்களில் அதிகபட்சமாகவும், தமிழகத்தின் எஞ்சிய மாவட்டங்களில் 2005 க்கும் கீழாகவும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon