--- --:--:-- --

நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிப்பு..! அதிர்ச்சி தகவல்..!

2

நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வந்தது கண்டு பிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு கூறியுள்ளது.

 

இதுகுறித்து யு‌ஜி‌சி வெளியிட்டுள்ள பட்டியலில் கேரளாவின் சென்ஜான்ஸ் பல்கலைக்கழகம் , போதி அகாடமி உயர்கல்வி நிறுவனம், ஆந்திராவின் கிருஷ் நியூ டெஸ்ட் நிகர்நிலை பல்கலைக்கழகம், மகாராஷ்டிராவில் ராஜா பல்கலைக்கழகம், கர்நாடகாவின் வடக்கன் பி சர்க்கார் வேர்ல்டு ஓபன் யூனிவர்சிட்டி உட்பட 24 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

 

ஆனால் தமிழ்நாட்டில் எந்தவொரு பல்கலைக்கழகமும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. அதேநேரம் போலி பல்கலைக்கழகங்களின் அதிகபட்சமாக டெல்லியில் 7, உத்திரப்பிரதேசத்தில் 8 பல்கலைக்கழகங்களில் இடம் பெற்றுள்ளதாக யு‌ஜி‌சி தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon