புதுச்சேரியில் 8ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெறுகிறது..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் எட்டாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் இன்று முதல் பள்ளிகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகின்றன.

 

வரும் எட்டாம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு 9 மற்றும் 11ஆம் வகுப்பு களுக்கும் சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்ள வகுப்புகள் தொடங்கும் எனவும் இதற்கு பள்ளிகளை தேர்வு செய்ய இன்று முதல் வரும் 7ம் தேதி வரை அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் எனவும் புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது.

 

அதன்படி அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டன. கிருமிநாசினி தெளிக்கும் பணிகளும் நடைபெற்றன. மேலும் தனிநபர் இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

 

வாரத்தில் ஆறு நாட்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்றும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள விருப்பத்தின் பேரில் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம் எனவும் புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது.


Leave a Reply