இந்திய விமானப்படை எந்த ஒரு மோதலுக்கும் தயாராக உள்ளது..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


ந்திய விமானப்படை எந்த ஒரு மோதலுக்கும் தயாராக இருப்பதாக விமானப்படை தளபதி ஆர்கேஎஸ் பதாரியா தெரிவித்துள்ளார். விமானப்படையில் ரஃபேல் விமானங்கள் சேர்க்கப்பட்டிருப்பது செயல்பாட்டில் விளிம்பு நிலையை கொடுத்து இருப்பதாக அவர் கூறினார்.

 

வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள், வலுவான கட்டமைப்பை கொண்டிருக்க வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய பாதுகாப்பு படையை தள்ளி இருப்பதாக பதாரியா தெரிவித்தார். அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை எதிர் கொள்வது சிக்கலானது என்று அவர் கூறியுள்ளார்.

 

எனினும், எந்த ஒரு கண்டத்தையும் சமாளிக்க இந்திய விமானப் படை தயார் நிலையில் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். அச்சுறுத்தலை முறியடிக்கும் வகையில் இந்திய விமானப்படை துரித நிலையில் மாற்றம் கொண்டு வருவதாக விமானப்படை தளபதி கூறியுள்ளார்.

 


Leave a Reply