இந்தியாவில் பெலூடா பரிசோதனை தொடக்கம்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


கொரொனா தொற்று உள்ளதா? இல்லையா? என்பதனை 45 நிமிடங்களில் கண்டறியும் பரிசோதனை இந்தியாவில் நடைமுறைக்கு வந்துள்ளது. பெலூடா பரிசோதனை எவ்வாறு நடத்தப்படுகிறது? இந்தியாவில் கொரொனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பாதிப்பை கண்டறியும் குறைந்த செலவிலான பரிசோதனையை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன.

 

கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது ஆர்‌டி‌பி‌சிஆர் ரேபிட் கிட் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. ஆனால் இந்த பரிசோதனைகள் துல்லியமான முடிவுகளை தருவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

இந்த நிலையில் டாடா குழுமம் டெல்லியில் இருக்கும் இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழக நிறுவனத்துடன் இணைந்து கண்டுபிடித்துள்ள பெலூடா பரிசோதனைக்கு ஐ‌சி‌எம்‌ஆர் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து தற்போது வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

 

முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பரிசோதனை மிகவும் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் மலிவு விலையில் ஆனது என்று ஐ‌சி‌எம்‌ஆர் தெரிவித்துள்ளது. தற்போது நடத்தப்படும் பிசிஆர் பரிசோதனைக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

 

ஆனால் பெலூடா சோதனைக்கு வெறும் 500 ரூபாய் மட்டுமே செலவாகும் என கூறப்படுகிறது. உமிழ்நீரை கொண்டே பிசிஆர் பரிசோதனை நடத்தப்படும். ஆனால் பெலூடா பரிசோதனையானது சி‌ஆர்‌ஐ‌எஸ்‌பி‌ஆர் எனப்படும் மரபணு திருத்த தொழில் நுட்பத்தை மையமாகக் கொண்டு நடத்தப்படுகிறது.

 

சோதனை முயற்சியாக 2000 பேருக்கு இந்த முறைப்படி பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் இதன் முடிவில் 96% உணர் திறனுடன், 98% நுணுக்கமானதாகவும் இருப்பது தெரியவந்துள்ளது. கர்ப்ப பரிசோதனை போன்று மருந்து கடைகளில் கிடைக்கும் இந்த கிட்டை வாங்கி அதில் மூக்கிலிருந்து மாதிரியை செலுத்தி சுயமாக பரிசோதனை செய்து கொள்ளலாம்.

 

பரிசோதனை முடிவுகள் வெறும் 45 நிமிடங் களிலேயே வெளிவந்து விடும்.பெலூடா என்ற பெயருக்கு பின்னால் ஒரு வரலாறே மறைந்திருப்பது தான் சுவாரசியம். உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரொனா இருக்கிறதா இல்லையா என்பதை அறியும் பரிசோதனை முறைக்கு மறைந்த பிரபல திரைப்பட இயக்குநர் சத்யஜித்ரே கதைகளில் வரும் துப்பறியும் நிபுணர் கதாபாத்திரத்தின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த சோதனையை உருவாக்கிய மருத்துவர் பிரபல வங்காள திரைப்பட இயக்குனர் சத்தியத்தின் தீவிர ரசிகராவார். இதனால் அவரது படத்தில் வரும் புகழ்பெற்ற துப்பறியும் நிபுணர் கதாபாத்திரமான பெலூடா பெயரை வைத்ததாகவும் இந்த பெயரை தனது மனைவியே பரிந்துரைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.


Leave a Reply