ஹத்ராஸ் கொடூரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் 5 கோரிக்கைகள்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


த்திரபிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்ததாக பிரியங்கா கூறியுள்ளார்.

 

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்த போது அவர்கள் விடுத்த 5 நிபந்தனைகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முதலாவதாக உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் முழு வழக்கு விசாரணையும் நடைபெற வேண்டும் என இளம் பெண்ணின் குடும்பத்தினர் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

 

ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியரை பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் அவருக்கு வேறு எந்த பெரிய பதவியும் கொடுக்கக்கூடாது என்று குடும்பத்தினர் கூறியதாக தெரிவித்துள்ளார். தங்களிடம் எதுவும் கேட்காமல் மகளின் உடல் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது ஏன் என வினவியதாகவும் தாங்கள் ஏன் மீண்டும் கொடுமைப் படுத்தப்படுகிறோம் என கேள்வி எழுப்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

மேலும் இறந்த உடலை தங்கள் மகள் தான் என எப்படி நம்புவது என அவர்களின் குடும்பத்தினர் வினவியதாகவும் பதிவிட்டுள்ளார். இந்த கேள்விகளுக்கான பதில்களை பெறுவது இந்த குடும்பத்தின் உரிமை என்று குறிப்பிட்டுள்ள பிரியங்கா காந்தி உத்தரபிரதேச அரசு இதற்கான பதில்களை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


Leave a Reply