உடல் மீது திரவத்தை தெளித்து 1 லட்சம் கொள்ளை..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வங்கியிலிருந்து பணம் எடுத்து வந்த ஆசிரியை மீது திரவத்தை வீசி கவனத்தை திசை திருப்பி ஒரு லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தனலட்சுமி என்ற ஆசிரியை ஓலப் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார்.

 

தனது செலவுக்காக சேலம் முதன்மை சாலையில் உள்ள வங்கியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு துணிப்பையில் வைத்து அதனை வயர் கூடையில் வைத்துக்கொண்டு கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

 

எல்ஐசி அலுவலகத்திற்கு அருகே பணம் செலுத்துவதற்காக கணவர் உள்ளே சென்ற நேரத்தில் ஆசிரியை தனலட்சுமி வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது மேலே ஏதோ ஈரம் படவே அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று கழுவி விட்டு மீண்டும் கணவருடன் வீட்டிற்கு வந்தார்.

 

அப்போது தான் பணம் வைத்திருந்த பையும் செல்போனும் காணாமல் போனது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது ஆசிரியர் தனலட்சுமி பின்பகுதி நின்ற ஓர் இளைஞர் அவரது திரவத்தை வீசுவதும் பின்னர் அவரிடம் பேச்சுக் கொடுத்தது தெரியவந்தது.


Leave a Reply