சுஷாந்த் சிங் மரணம் கொலை அல்ல தற்கொலையே..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் கொலை அல்ல தற்கொலை தான் என்று எய்ம்ஸ் குழு சிபிஐயிடம் அறிக்கை அளித்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகரின் உடல் கடந்த ஜூன் மாதம் பதினான்காம் தேதி மும்பையின் பாந்திராவில் உள்ள வீட்டில் மீட்க்கப்பட்டது. அவரது மரணம் பெரும் சர்ச்சைகளையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தியது.

 

அவரது காதலி ரியா உள்ளிட்டோர் மீது தந்தை புகார் அளித்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. சுஷாந்தின் மரணம் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையை மருத்துவர் சுதிர் குப்தா தலைமையிலான எய்ம்ஸ் மருத்துவமனை குழு மறு மதிப்பீடு செய்தது.

 

சுஷாந்த் சிங் உள்ளுறுப்பு மாதிரிகளையும் இந்த குழு மறு மதிப்பீடு செய்தது. மேலும் கணினி, கேமரா, 2 ஹார்ட் டிஸ்க்குகள், 2 செல்போன்கள் ஆகியவை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதை தொடர்ந்து சுதிர் குப்தா குழு தங்கள் அறிக்கையை கடந்த 29ஆம் தேதி சிபிஐயிடம் சமர்ப்பித்துள்ளது.

 

அதில் சுஷாந்த் சிங் மரணம் தற்கொலைதான் என்றும் கொலை அல்ல என்றும் சுதிர் குப்தா தலைமையிலான குழு கூறியுள்ளது.சுஷாந்த் சிங் குடும்ப வழக்கறிஞர் 200% கொலைதான் என்று குற்றம் சாட்டி இருந்த நிலையில், 200% தற்கொலைக்கான சாத்தியக்கூறுகளை உள்ளன என்று சுதிர் குப்தா குழு குறிப்பிட்டுள்ளது.


Leave a Reply