மருத்துவ கல்லூரிகள் நடத்தும் ஆன்லைன் வகுப்புகள் செல்லும்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


கொரொனா பேரிடர் காலத்தில் மருத்துவ கல்லூரிகள் நடத்தும் ஆன்லைன் வகுப்புகள் செல்லும் என தேசிய மருத்துவ ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும், தேசிய மருத்துவ ஆணையத்தின் செயலாளர் ஆர்.கே. வாட்ஸ் கடிதம் எழுதியுள்ளார்.

 

அதில் கொரொனா பேரிடர் காலத்தில் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவ கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக நடத்தும் வகுப்புகள் அனுமதிக்கப்பட்டது தான் என்றும், செல்லுபடியாக கூடியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

தியரி வகுப்புகளை ஆன்லைன் மூலமாக நடத்தலாம் என்றும் கொரொனா பேரிடர் முடிந்த பின்னர் கல்லூரி திறக்கப்படும் போது செய்முறை மற்றும் கிளினுக்குகள் பயிற்சி வகுப்புகளை மேற்கொள்ளலாம் எனவும் தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

 

வெளிநாட்டுமருத்துவ பல்கலைக்கழகங்கள் நடத்தும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி இந்திய மருத்துவ கவுன்சில் கூறியதை இப்போது பொருத்திப் பார்த்து ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply