ஆற்றில் கிடைத்த மீனால் லட்சாதிபதி ஆன பாட்டி..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


மேற்கு வங்கத்தில் பெரிய அளவிலான மீனைப் பிடித்த வயதான ஏழை பெண் ஒருவர் ஒரே நாளில் லட்சாதிபதி ஆகிவிட்டார். சாகர் தீவை சேர்ந்த புஷ்பாகர் என்ற பெண் கோலா என்ற பெயரில் வங்காள மொழியில் அழைக்கப்படும் 52 கிலோ எடை கொண்ட ராட்சத மீனை ஆற்றிலிருந்து பிடித்துள்ளார். பெரும்பாடுபட்டு அதனைப் கரைக்கு கொண்டு வந்துள்ளார்.

 

ஒரு கிலோ 6,200 ரூபாய்க்கு அந்த மீன் விலை போனதால் 3 லட்சம் ரூபாயை அவருக்கு கிடைத்தது. இவ்வளவு பெரிய மீனை தனது வாழ்நாளில் பார்த்ததே இல்லை என்றும் அந்த பெண் தெரிவித்தார். படகு மோதியதில் அந்த மீன் இறந்திருக்கலாம் என்றும் கிராமவாசிகள் சிலர் தெரிவித்தனர்.

 


Leave a Reply