கொரோனாவுக்கு மருந்து தயாரிக்க சுமார் 5 லட்சம் சுறா மீன்கள் கொல்லப்பட்டிருக்கலாம்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


கொரோனாவுக்கு மருந்து தயாரிக்க சுமார் 5 லட்சம் சுறா மீன்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கலிஃபோர்னியாவில் உள்ள சுறா மீன்களுக்கான அமைப்பு ஒன்று தெரிவித்த தகவலின்படி கோவிட்-19 மருந்துக்கு சுறா மீன்களின் கல்லீரலில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.

 

இதற்காக 5 லட்சம் மீன்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அந்த அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது. சுறாக்கள் கொல்லப்படுவதை தடுக்க அதன் கல்லீரலில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் பசையை கரும்பின் மேற் பகுதியில் இருந்து செயற்கை முறையில் தயாரிப்பதற்கும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


Leave a Reply