போதையில் நண்பனை கொலை செய்த கும்பல்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


து விருந்துக்கு வந்த இளைஞரை போதையில் இருந்த நண்பர்கள் கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது நாட்டுக்கும் வீட்டுக்கு மட்டும் அல்ல உயிருக்கும் கேடு என்பதை நிரூபித்திருக்கிறது நெல்லை நடந்திருக்கும் இந்த படுகொலை சம்பவம்.

 

மகிழ்ச்சியோடு மது விருந்துக்கு வந்த இளைஞரை மயானத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர் 4 போதை நண்பர்கள். ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடக்கும் சதீஷ்குமார் தென்காசி மாவட்டம் நல்லூரை சேர்ந்தவர். சில ஆண்டுகளுக்கு முன் மும்பைக்கு குடிபெயர்ந்த இவர் அங்கு கூலி வேலை செய்து வந்துள்ளார்.

 

கொரொனா ஊரடங்கால் பணியிழந்த சதீஷ்குமார் மீண்டும் பிழைப்புக்காக சொந்த ஊர் திரும்பியுள்ளார். கிடைத்த வேலைக்கு சென்று வந்த அவரது கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் உடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது ஒன்று சேரும் அவர்கள் நெல்லை மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள காட்டுப் பகுதியில் அடிக்கடி மது குடிப்பது வழக்கம்.

 

அதேபோல் புதன்கிழமையும் நண்பர்களோடு மது குடிக்க சென்றுள்ளார் சதீஷ்குமார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த நண்பர்கள் அவரை கற்களாலும் கட்டைகளாலும் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர்.

 

இதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்ற முத்துக்குமார், உள்ளிட்ட 4 பேர் நாங்குநேரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்தனர். இதையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் சதீஷ் குமாரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

போதையில் ஏற்பட்ட வாக்குவாதம் தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் விவகாரம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறது காவல்துறை.


Leave a Reply