அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் 216 விளம்பரங்களை பேஸ்புக் நீக்கியுள்ளது..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


மெரிக்க அதிபர் டிரம்ப் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய 216 விளம்பரங்களை நீக்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரொனா தொற்று மற்றும் குடியேற்றக் கொள்கை குறித்து டிரம்ப் அவதூறாக பேசிய விளம்பரங்கள் நீக்கப்பட்டுள்ளன.

 

சிரியா, சோமாலியா ஏமனில் இருந்து வருவோருக்கு ஆதரவளித்தால் அமெரிக்காவில் கொரொனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அந்த வீடியோவில் டிரம்ப் பேசி இருந்ததாக பேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

 

நாட்டின் பாதுகாப்பு சுகாதாரம் உள்ளிட்டவை குறித்த தவறான கருத்துகள் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் என்பதால் நீக்கப்பட்டிருப்பதாக ஃபேஸ்புக் விளக்கம் அளித்துள்ளது.


Leave a Reply