அனுராக் காஷ்யப்பிடம் நடத்தப்பட்ட 8 மணி நேர விசாரணை..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பிடம் மகாராஷ்டிரா காவல்துறையினர் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்தியத் திரையுலகின் பிரபல இயக்குனரான அனுராக் காஷ்யப் மீது மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

அதில் கடந்த 2013 ஆம் ஆண்டு பட வாய்ப்பு கேட்டு சென்ற போது அனுராக் காஷ்யப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறியிருந்தார். அதனடிப்படையில் அனுராக் காஷ்யப் மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

 

கைது செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, நடிகை பயல் கோஷ் ஆகியோர் வலியுறுத்தி வந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு காவல்துறையினர் அழைப்பாணை அனுப்பினர்.

 

அதனைத் தொடர்ந்து மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் நேற்று காலை 10 மணிக்கு அனுராக் காஷ்யாப் ஆஜரானார். அவரிடம் 8 மணி நேரம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

 


Leave a Reply