தமிழகத்தில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


மிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்களில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Leave a Reply