கொரோனா பாதிப்பில் இருந்து விஜயகாந்த், பிரேமலதா பூரண குணம்.. இன்று டிஸ்சார்ஜ்… மருத்துவமனை தரப்பு அறிக்கை!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : கோப்பு படம்


கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும் குணம் அடைந்து இன்று வீடு திரும்ப உள்ளதாக மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

உடல் நல பாதிப்பு காரணமாக ஓய்வில் இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கான மியாட் மருத்துவமனையில் சேர்ந்தார். அப்போது அவருக்கு லேசான கொரோனா தொற்று அறிகுறி இருப்பது உறுதியானதால் சிகிச்சையில் இருந்தார். தொடர்ந்து அவரது மனைவி பிரேமலதாவுக்கும் கடந்த வாரம் தொற்று உறுதியான நிலையில் அவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

 

இந்நிலையில், தொடர் சிகிச்சையாலும், ஒத்துழைப்பாலும் இருவரும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு குணமடைந்துள்ளதாகவும், இன்று இருவரும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் எனவும் மியாட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள மருத்துவ நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும் இன்று டிஸ்சார்ஜ் என்ற தகவலால் தேமுதிக தொண்டர்களும், நிர்வாகிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Leave a Reply