சென்னை – மதுரை இடையே தேஜஸ் சிறப்பு ரயில் சேவை இன்று தொடங்கியது..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


சென்னை – மதுரை இடையே தேஜஸ் சிறப்பு ரயில் சேவை இன்று தொடங்கியது. திருநெல்வேலி, தென்காசி, மதுரை, ராமேஸ்வரம் மற்றும் கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் சேவை அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது.

 

இதன்படி சென்னை எழும்பூர், மதுரை தேஜஸ் சிறப்பு ரயில் இன்று காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட தேஜஸ் ரயில் பகல் 12.20 மணிக்கு மதுரை சென்று சேரும். அதேபோல் மதுரையில் இருந்து 3.15 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு சென்னை – எழும்பூர் வந்தடையும். வியாழக்கிழமை தேஜஸ் சிறப்பு ரயில் கிடையாது.

 

திருச்சி கொடைக்கானல் சாலை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Leave a Reply