--- --:--:-- --

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது..!

3.1

பிரமோஸ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக மீண்டும் ஒரு முறை பரிசோதித்துள்ளது. ஒடிசாவின் பாலசோர் கடற்கரை பகுதியில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது.

 

ஏவுகணை 400 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து இலக்கை துல்லியமாக தாக்கியதாக சோதனையை நடத்திய மத்திய அரசுடன் டிஆர்டிஓ அமைப்பு தெரிவித்துள்ளது. ஒளியை விட மூன்று மடங்கு வேகமாக பாயக்கூடிய ஏவுகணையான பிரமோஸ் இந்திய ரஷ்ய கூட்டு தயாரிப்பாகும்.

 

இந்த ஏவுகணைகளை நிலப்பரப்பு மட்டுமல்லாமல் கப்பல், நீர்மூழ்கி கப்பல், விமானம் உள்ளிட்ட இடங்களிலிருந்து ஏவி எதிரிகளுக்கு பேரிழப்பை ஏற்படுத்த முடியும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon