--- --:--:-- --

கஸ்தூரிக்கே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் சம்பளம் தரவில்லையா?

2.2

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று ஓராண்டாகியும் தனக்கான சம்பளம் வழங்கப்படவில்லை என நடிகை கஸ்தூரி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது ஆதரவற்ற குழந்தைகளின் அறுவை சிகிச்சை செலவுக்காக தான் என கூறியுள்ளார்.

 

மேலும் எப்போதுமே பொய்யான வாக்குறுதிகளை தான் நம்புவது இல்லை எனக் கூறியுள்ள கஸ்தூரி இந்த விஷயத்தில் இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று பதிவிட்டிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசன் வரும் 4ஆம் தேதி முதல் ஆரம்பமாகும் நிலையில் கஸ்தூரி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon