தமிழக பேருந்துகள் புதுச்சேரி எல்லைக்குள் செல்ல மறுப்பு…!
தமிழக அரசு பேருந்துகள் புதுச்சேரி எல்லைக்குள் அனுமதிக்கப்படாமல் மாநில எல்லைகளில் நிறுத்தப்படுகின்றன. தமிழகத்தில் பேருந்துகள் இன்று முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த தமிழக அரசு பேருந்துகள் புதுச்சேரி, கோரிமேடு எல்லையில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் நடந்து சென்ற பேருந்தில் பயணம் செய்கின்றனர். அதேபோல புதுச்சேரியில் உள்ள தமிழக அரசு பேருந்து பணிமனையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவில்லை.
மேலும் புதுச்சேரி அரசு பேருந்துகள் தமிழக பகுதிகளுக்கு இயக்க அனுமதி வழங்கப்படவில்லை இரு மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து தொடங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.






