தூத்துக்குடியில் சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்கு சீல்..!
மாநகராட்சி விதிகளை மீறி கட்டடங்கள் கட்டி இருப்பதாக கூறி தூத்துக்குடி சென்னை சில்க்ஸ் நிறுவனம் மூலம் மூடி சீல் வைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி சாலையில் சென்னை சில்க்ஸ் நிறுவனம் சார்பில் 5 மாடி கட்டிடம் கட்டப்பட்டு அங்கு ஜவுளிக்கடை, நகைக்கடை மற்றும் சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாநகராட்சி கட்டடம் கட்டுவதற்காக வாங்கிய அனுமதியை மீறி கட்டடம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அவர்கள் நிறுவனத்திற்கு அருகே பின்புறம் சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு மாநகராட்சியில் இருந்து எந்தவொரு அனுமதியும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு விளக்கம் கேட்டது.
ஆனால் அவர்கள் முறையான விளக்கம் அளிக்காத காரணத்தால் இன்று காலை மாநகராட்சி ஆணையர் போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி ஊழியர்கள் சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்கு சீல் வைத்துள்ளனர்.






