--- --:--:-- --

திரையரங்குகளை திறக்க அனுமதி கோரி கடிதம்..!

7

திரையரங்குகள் மூடப்பட்டு 150 நாட்கள் முடிந்துள்ள நிலையில் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கொரொனா தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 17ஆம் தேதியிலிருந்து திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

 

150 நாட்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் சுமார் 700 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் திரையரங்குகளை சார்ந்துள்ள தொழிலாளர்களின் குடும்பங்கள் வருமானமின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த நிலையில் 150 நாட்களாக மூடப்பட்டுள்ள திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் தமிழக முதல்வருக்கும் இந்திய பிரதமருக்கும் கடிதம் மூலம் கோரிக்கை விடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon