--- --:--:-- --

கிருஷ்ணகிரி அருகே லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்து..!

6

கிருஷ்ணகிரி அருகே லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் வடமாநில இளைஞர்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சென்னையில் இருந்து திருப்பூருக்கு வேலைக்கு செல்வதற்காக வடமாநிலத்தை சேர்ந்த 4 பேர் வாடகை காரில் சென்று கொண்டிருந்தனர்.

 

அவர்கள் கிருஷ்ணகிரி அருகே காவேரிப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது அது வந்து கொண்டிருந்த கார் லாரியின் பின்பக்கத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் வடமாநில இளைஞர்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

 

ஓட்டுனர் உட்பட 3 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon