தமிழகத்தில் ஆகஸ்ட் 10 முதல் ஜிம்கள் இயங்க தமிழக அரசு அனுமதி..!
தமிழகத்தில் தனியார் உடற்பயிற்சிக் கூடங்கள் வரும் 10 ஆம் தேதி முதல் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் 50 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களை மட்டுமே கொண்டு உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்க்கான நிலையான வழிகாட்டு செயல்முறைகள் தனியாக வெளியிடப்படும் என்றும் அவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
உடற்பயிற்சி உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நல சங்க நிர்வாகிகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் முதலமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






