ஏடிஎம் இல் கொள்ளையடிக்க முயற்சி..! அலாரம் ஒலித்ததால் அலறியடித்து ஓட்டம்..!
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற முகமூடி நபர் அலாரம் அடித்ததால் தப்பியோடினார் . அவர் அலறியடித்து ஓடிய காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
வந்தவாசி பொன்னூர் மலையில் தனியார் பொறியியல் கல்லூரி வாயிலில் தனியார் வங்கியின் ஏடிஎம் உள்ளது. இதில் திங்களன்று இரவு இரும்பு கம்பி யுடன் உள்ளே நுழைந்த முகமூடி அணிந்த ஒரு நபர் சிசிடிவி கேமராவில் ஸிப்ரே அடித்துள்ளார்.
பிறகு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றபோது அலாரம் ஒலித்தது. இதை எதிர்பாராத முகமூடி நபர் அங்கிருந்து தப்பியோடினார். இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகின. உரிய நேரத்தில் அலாரம் அடித்ததால் ஏடிஎம்மில் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் பணம் தப்பியது.






