--- --:--:-- --

தமிழக மாணவர்களை ரஷ்யாவில் இருந்து மீட்ட நடிகர் சோனு சூட்..!

7

ரஷ்யாவில் மருத்துவ படிப்பு படித்த தமிழகத்தை சேர்ந்த 90க்கும் மேற்பட்டோர் ஹிந்தி நடிகர் சோனு சூட் உதவியுடன் மாஸ்கோவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து சேர்ந்தனர். ஜூலை மாதத்திற்கு பின் இந்திய அரசின் சார்பில் சிறப்பு விமானங்கள் இயக்கப்படவில்லை.

 

இதனால் ரஷ்யாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ் படித்து வந்த தமிழக மாணவர்கள் தாய் நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இது குறித்து அறிந்த நடிகர் சோனு சூட் ஒரு தனி விமானத்தை ஏற்பாடு செய்து மாஸ்கோ சென்று மாணவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்தார்.

 

இந்த விமானம் மாஸ்கோவில் நேற்று பிற்பகல் புறப்பட்டு சென்னைக்கு வந்து சேர்ந்தது. இந்த விமானத்தில் பாதுகாப்புக்காக தாய்நாடு திரும்பிய 90க்கும் மேற்பட்ட மாணவர்கள் நடிகர் சோனு சூட்டுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon