பெல்ஜியம் நாட்டில் கடலில் நிகழ்ந்த அரிய நிகழ்வு..!
பெல்ஜியம் நாட்டில் பெஸ்ட் பிளான்டர்ஸ் மாகாணத்தில் நேற்று கடல் சூறாவளி ஏற்பட்டது. கடல் நீரானது ஒரு குறிப்பிட்ட அளவு ஒன்று திரண்டு சுற்றி சுழன்றபடி ஆகாயத்தைத் தொட்டு விடுவது போல காணப்பட்டது. இது பார்ப்பதற்கு அழகிய நீர்வீழ்ச்சி ஒன்று வானில் இருந்து பூமியில் விழுவது போல தோற்றமளித்தது.
கடலின் அமைதியான நிலையில் பயங்கர இடி ஏற்பட்டதால் இத்தகைய அரிய நிகழ்வு ஏற்பட்டதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.






