தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : பாதிக்கப்பட்டோர் 5,864 பேர்…! 97 பேர் உயிரிழப்பு!!
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5864 ஆகவும், உயிரிழந்தவர்கள் 97 பேர் எனவும் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இன்று ஒரே நாளில் 5,864 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,39,978ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 5,295ஆகும். இதனால் இதுவரை குணமானவர்களின் எண்ணிக்கை 1,78,178 ஆகவும் உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் 97 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 3838 ஆக உயர்ந்துள்ளது. இதில் அரியலூரைச் சேர்ந்த 5 வயது பெண் குழந்தையும், நாகையைச் சேர்ந்த 3 வயது பெண் குழந்தையும் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.
இன்று சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் 1,175 பேர் ஆவர். இதனால் சென்னையில் மட்டும் 98,767 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் பதிவான கொரோனா தொற்று பாதிப்பு விபரம் வருமாறு:
செங்கல்பட்டு – 354
திருவள்ளூர் -325
கோவை – 303
நெல்லை-277
ராணிப்பேட்டை-272
தேனி -261
குமரி -248
விருதுநகர் – 244
தூத்துக்குடி -220
மதுரை -220
தி.மலை – 187
வேலூர் -184
காஞ்சிபுரம் -175
கடலூர்-141
திண்டுக்கல்-138
புதுக்கோட்டை-128
திருச்சி – 118
தஞ்சை-97
விழுப்புரம் – 95
க.குறிச்சி-93
சிவகங்கை-75
சேலம்-70
தென்காசி-56
திருப்பத்தூர்-50
நாமக்கல்-48
ராமநாதபுரம்-46
கரூர்-41
நீலகிரி -33
திருப்பூர்-32
நாகை-28
பெரம்பலூர் -27
கிருஷ்ணகிரி-26
அரியலூர்-17
தர்மபுரி -16
ஈரோடு -12
திருவாரூர்-4 என பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






