பள்ளிகளில் தற்போதைக்கு ‘ நோ அட்மிசன் ‘..!
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் தொட்டிபாளையத்தில் 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணி கொடிவேரி அணையை சுற்றுலா தலமாக மாற்ற 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளை அவர் தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை என தெரிவித்தார். தனியார் பள்ளிகளில் மாணவர்களின் மதிப்பெண் பட்டியலுடன் விளம்பரப் பலகை வைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.






