--- --:--:-- --

சாத்தான்குளம் கொலை வழக்கில் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு..!

5.1

சாத்தான்குளம் தந்தை, மகன் சித்திரவதை கொலை வழக்கில் விசாரணையின் நிலை அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய சிபிஐக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

சாத்தான்குளம் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் சித்திரவதை மரணம் தொடர்பாக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருக்கும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. விசாரணை தொடர்பாக நிலை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 

அதன்படி இந்த வழக்கை தொடக்கத்தில் விசாரித்து வந்த சிபிசிஐடி சார்பில் நிலை அறிக்கை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய நீதிமன்றத்தில் செய்யப்பட்டது. சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் விசாரணை நடத்துவதற்காக வந்த 8 அதிகாரிகளில் 7 அதிகாரிகளுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்க தயார் என்றும் தெரிவித்தார்.

 

 

அப்போது விசாரணையின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதனிடையே உயிரிழந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி தரப்பில் தங்களையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்க கோரிக்கை விடப்பட்டது. இதை ஏற்று நீதிபதிகள் அதற்கான மனு கிடைக்கப் பெற்றதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon