--- --:--:-- --

கொரொனாவால் உயிரிழந்த நண்பன்..! நிதி திரட்டி கொடுத்த காவலர்..!

7

கொரொனாவால் உயிரிழந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நண்பனின் குடும்பத்திற்கு கோவையை சேர்ந்த காவலர் ஒருவர் சக போலீசாருடன் நிதி திரட்டிக் கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். வேடசந்தூர் ரத்தின கிரியைச் சேர்ந்த கணேசன் திருப்பூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸில் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

 

கொரொனாவால் பாதிக்கப்பட்ட கணேசன் கடந்த மாதம் உயிரிழந்துள்ளார். கோவை மாவட்ட காவல்துறையில் பணியாற்றும் கணேசனின் நண்பர் பாபு என்பவருக்கு அவரது இழப்பு தாமதமாகவே தெரிய வந்துள்ளது. எனவே குடும்ப சூழலை அறிந்த பாபு சக காவலர்களுடன் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் வரை நிதி திரட்டி அவரது வீட்டிற்கு நேரில் வந்து வழங்கியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon