ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்குகிறதா?

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19-ஆம் தேதி அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரொனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே ஐ‌பி‌எல் தொடர் ஒத்தி வைக்கப்பட்டது.

 

எனவே ஐபிஎல் தொடரை ஆண்டு இறுதியில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தொடரை 51 நாட்களுக்குள் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி போட்டிகள் தொடங்கி நவம்பர் மாதம் எட்டாம் தேதி அன்று இறுதி போட்டி நடைபெறும் எனவும் பிசிசிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

போட்டியில் பங்கேற்பதற்கான 8 அணி வீரர்களும் ஆகஸ்ட் மாதத் திலேயே ஐக்கிய அரபு அமீரகத்தை சென்றடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்த தொடருக்கான அட்டவணை இறுதி செய்வதற்காக ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது.


Leave a Reply