மருத்துவமனையில் இரு பெண்கள் தற்கொலை…! சேலை, துப்பட்டா அணிய தடை..!

பெங்களூருவில் உள்ள கே சி மருத்துவமனையில் பெண் நோயாளிகள் இருவர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டதால் அங்குள்ள பெண்கள் சேலை மற்றும் துப்பட்டா அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

அந்த மருத்துவமனையில் கொரொனா பிரிவில் அனுமதிக்கப்பட்ட இரு பெண்கள் நள்ளிரவில் கழிவறையில் தூக்கிட்டு அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் பெண் நோயாளிகள் சேலை மற்றும் துப்பட்டாவை அணியக் கூடாது எனவும் மாறாக அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் கவுன் போன்ற உடை வழங்கப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இரவில் நோயாளிகளுக்கு சிறிய அளவில் தூக்க மாத்திரை கொடுக்க பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.


Leave a Reply