துருக்கியில் மசூதியாக மாற்றப்பட்டுள்ள அருங்காட்சியகம்..!
துருக்கி தலைநகர் இஸ்தான் புல்லில் வரலாற்று சிறப்புமிக்க அருங்காட்சியகமாக திகழ்ந்து தற்போது மசூதி ஆக மாற்றப்பட்டுள்ள ஹைக்கிய சோபியாவின் முதல் தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கிபி ஐந்தாம் நூற்றாண்டில் ரோம பேரரசர் களால் கட்டப்பட்ட தேவாலயத்தில் 900 ஆண்டுகள் கிறிஸ்தவ வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் ஓட்டோமான் பழங்குடியினரின் படையெடுப்பைத் தொடர்ந்து ஏறத்தாழ 480 ஆண்டுகள் இந்த தேவாலயம் மசூதி ஆக செயல்பட்டது.
பின்னர் 1934 ஆம் ஆண்டு முதல் 85 ஆண்டுகளுக்கு அருங்காட்சியகமாக செயல்பட்டு வந்த நிலையில் மீண்டும் மசூதியாக மாற்றுமாறு அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இந்த நிலையில் அங்கு நடந்த தொழுகையில் பொதுமக்கள் முன்னிலையில் இமாம்கள் குர்ஆன் ஓதி இறை வழிபாட்டை தொடக்கி வைத்தனர்.






