என்னைவிட அதிக தேசப்பற்று மிக்கவர் யாரும் இல்லை என தன்னைத்தானே கூறிக்கொண்ட டிரம்ப்..!

கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய் மற்றும் ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு மிக எளிதில் பரவக்கூடியது என்பதால் அனைவரும் முகக்கவசம் பயன்படுத்த உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது செய்தியாளர்களை சந்திக்கும்போது என அனைத்து நேரமும் முக கவசம் அணியாமல் சுற்றித் திரிந்தார்.

 

அவருடைய நெருங்கிய அதிகாரிகளுக்கு கொரொனா உறுதி செய்யப்பட்ட போதும் முகக்கவசம் அணிய வில்லை. ஆனால் பல்வேறு தரப்பினரால் எழுந்த விமர்சனங்களை அடுத்து கடந்த 12-ஆம் தேதி முதல் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது முக கவசம் அணிந்து கொள்கிறார்.

 

இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் நாம் அனைவரும் இணைந்து கண்ணுக்குத் தெரியாத சீன வைரஸை ஒழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். சமூக இடைவெளியை பின்பற்ற முடியாத சூழலில் முக கவசம் அணிவது தேசப்பற்று மிக்க செயல் என பலர் தெரிவித்து வருகின்றனர். அப்படியாயின் உங்கள் விருப்ப அதிபரான என்னை விட யாரும் அதிக தேசப் பற்று மிக்கவர் இல்லை என்றார்.


Leave a Reply