தமிழகம் முழுவதும் மின்சாரக் கட்டணத்தை அதிகமாக வசூல் செய்து மக்களிடமே கொள்ளை அடிக்கும் தமிழக அரசை கண்டித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க. அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து திருமுருகன்பூண்டி பேரூர் கிளை தி.மு.க. சார்பில் பூண்டி கிளை அலுவலகமான கலைஞர் அறிவாயலத்தில் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசை கண்டித்தும், மின் கட்டணத்தை மறைமுகமாக அதிகப்படுத்தியதை கண்டித்தும் கோஷமிட்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பூண்டி பேரூர் கழக துணை செயலாளர் மூர்த்தி (எ) கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 4வது வார்டு செயலாளர் யுவராஜ், ஒன்றிய பிரதிநிதி ராமநாதன், முன்னாள் கவுன்சிலர் நாகராஜ், இளைஞரணியின் லிங்கேஸ்வரன், ஜெகதீசன், வடிவேல், மனோகரன், நிவாஸ், மூர்த்தி, முன்னாள் வார்டு பிரதிநிதி கதிர்வேல், தளபதி குணசேகரன் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.