காஷ்மீரில் தீவிரவாதிகள் 3 பேர் கைது..!

காஷ்மீரில் வனப்பகுதியில் பதுங்கி இருந்த 3 தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர். பக்கீர்போரா பகுதியில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக புட்காம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

 

இதையடுத்து போலீசார் ராஷ்ட்ரீய ரைபிள் படைப் பிரிவினர் மற்றும் மத்திய ரிசர்வ் படையினர் குறிப்பிட்ட பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது வனப்பகுதியில் மறைந்திருந்த 3 தீவிரவாதிகள் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

 

அவர்களிடமிருந்து ஏகே 47 ரக துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.


Leave a Reply