பள்ளிகளை எப்ப திறக்கலாம்? உங்க ஆலோசனையை கூறுங்கள்…! பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மத்திய அரசு!!

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை திறப்பதில் காலதாமதமாகி குழப்பங்களும் நிலவி வரும் நிலையில், பள்ளிகளை எப்போது திறக்கலாம்? என ஆலோசனைகளை கூறுமாறு பெற்றோர் மற்றும் பொதுமக்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

கொரோனா பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 4 மாதங்களாகியும் கொரோனா கொடுமை முடிந்தபாடில்லை. தற்போது தான் நாட்டில் தொற்று பரவல் வேகம் அதிகரித்துள்ளதால் பள்ளி, கல்லூரிகளை திறப்பது இப்போதைக்கு சாத்தியமில்லை என்ற சூழல் நிலவுகிறது.

 

கொரோனாவால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவது குறித்து பெற்றோர்கள் கவலையில் உள்ளனர். இதனால் பாடங்களை ஆன்லைனில் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு மாற்று ஏற்பாடுகளை மத்திய மனித மேம்பாட்டு அமைச்சகம் முன் வைத்தாலும் ஏழை, கிராமப்புறங்களைச் சேர்ந்த அனைவருக்கும் சாத்தியமில்லாத ஒன்றாகவே கருதப்படுகிறது. இதனால் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனையை பெற்றோரிடம் கேட்க மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

 

அதன்படி, பள்ளிகளை ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் எப்போது திறக்கலாம்? என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள், கருத்துக்களை மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 


Leave a Reply