ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் கடக்க கட்டப்பட்ட பாலத்திற்கு ஆபத்து..!

ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சிவகங்கை மாவட்ட கிராமங்களை பெரிய கண்மாயின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் இணைத்து வருகிறது. இத்தகைய முக்கியதுவம் வாய்ந்த பாலத்தின் துாண்களில் அத்தி மரம், ஆமரம், வேம்பு உள்ளிட்ட மர கன்றுகள் வளர்ந்து வருகின்றன. பாலத்தின் துாண்களில் வளர்ந்து வரும் மரக்கன்றுகளால், அதன் வேர்கள் பாலத்தின் சிமெண்ட் பூச்சுகளில் விரிசல் ஏற்பட்டு வருகின்றன.

இந்த மரக்கன்றுகளை தற்போதே அகற்றாவிட்டால், அதிக வாகன போக்குவரத்து உள்ள இந்த பாலத்தின் உறுதி தன்மை கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. எனவே சம்மந்தபட்ட துறை அதிகாரிகள் பாலத்தின் துண்களில் வளர்ந்து வரும் மரக்கன்றுகளை அகற்ற வேண்டும்.


Leave a Reply