நேரலையின் போது செய்தி வாசிப்பாளர் மேரிக்காவின் பல் கழன்று விழுந்தது!

உக்ரைன் நாட்டின் தொலைக்காட்சி நேரலையின்போது செய்தி வாசிப்பாளரின் பல் கழன்று விழுந்தது. டிஎஸ்என் என்ற தொலைக்காட்சி சேனலில் மேரிக்கா என்ற பெண் செய்தி வாசிப்பாளர் நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது முன் பற்களில் ஒன்று எதிர்பாராதவிதமாக கழன்று விழுந்தது.

 

ஆனாலும் அதனை சற்றும் பொருட்படுத்தாத மேரிக்கா பல்லை கழற்றி தனது கையில் வைத்துக்கொண்டு அந்த செய்தியை வாசித்தார். சமூக ஊடகங்களில் இந்த வீடியோவை பலரும் நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தாலும் இக்கட்டான நிலையிலும் தொடர்ந்து பணியாற்றி மேரிக்காவின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.


Leave a Reply