முப்தி நூர் வாலி மெசூத் சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா. அறிவிப்பு..!

பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பின் தலைவர் முப்தி நூர் வாலி மெசூத்தை சர்வதேச தீவிரவாதியாக ஐநா சபை அறிவித்துள்ளது.

 

இதுகுறித்து பாதுகாப்பு கவுன்சில் கூடியபோது பாகிஸ்தானின் டி‌டி‌பி என்ற அமைப்பை அல்கொய்தா, ஐ‌எஸ் அமைப்புடன் இணைத்தது. அல்கொய்தாவுடன் தொடர்புடைய அமைப்புகளுக்கு ஆதரவாகவும்,சேர்ந்தும் அவர்களுக்கு நிதி உதவி அளித்து திட்டமிடல், செயல்பாட்டு வசதி செய்து கொடுத்தல் ஆகிய உதவிகளையும் செய்வதாக ஐ.நா குற்றம் சாட்டியுள்ளது.

 

இதையடுத்து தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பின் தலைவர் முப்தி நூர் வாலி மெசூத்தை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது. முன்னதாக ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply