தமிழகத்தில் இன்று தளர்வுகளற்ற முழு பொது முடக்கம்..!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகளற்ற முழு பொது முடக்கம் கடைபிடிக்கப்படுகிறது. பெருந்தொற்றான கொரொனா வைரஸ் பரவலை தடுக்கும் ஒரு நடவடிக்கையாக நாடு முழுவதும் முழு பொது முடக்கம் அமலில் உள்ளது. பல்வேறு பகுதிகளில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

 

தமிழகத்தில் கொரொனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் இந்த மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாநிலம் முழுவதும் தளர்வற்ற முழு பொது முடக்கம் கடைபிடிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி முந்தைய இரு ஞாயிற்றுக் கிழமைகளை போல இன்றும் தளர்வுகள் இல்லாத முழு பொது முடக்கம் கடைபிடிக்கப்படுகிறது.

 

தேவை என்று வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள், பாலகங்கள் தவிர அனைத்து கடைகளும் இன்று திறக்கப்படாது. இந்நிலையில் நேற்று சென்னை காசிமேடு மீன் சந்தையில் வியாபாரிகள் அதிகளவில் திரண்டனர். ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் திரண்டதால் கொரோனா தடுப்பு வழி காட்டு நெறிமுறைகள் காற்றில் பறந்தன .

 

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இன்றைய அசைவ உணவுக்கு தேவையான இறைச்சியை வாங்க அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு திரண்டனர். திண்டுக்கல்லில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளில் மது வகைகளை வாங்க ஏராளமானோர் குவிந்தனர். தனிநபர் இடைவெளியை பின்பற்ற மூங்கில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில் அவர்கள் முந்தியடித்து கொண்டு மது வகைகளை வாங்க ஆர்வம் காட்டினர்.

 

புதுக்கோட்டையிலும், அரசு மதுபானக் கடையில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டது. என்பதால் முன்கூதளர்வுகளற்ற முழு பொது முடக்கம் என்பதால் முன் கூட்டியே மது வகைகளை வாங்கி இருப்பு வைக்க மது குடிப்போர் குவிந்தனர். டாஸ்மாக் கடைகளின் வாடிக்கையாளர்களால் சாந்தநாதபுரம், சந்தைப்பேட்டை சாலை பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.


Leave a Reply