தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் புதிய உச்சம் தொட்டது..!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் (4807) மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் (88) அதிகமாக பதிவாகி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

 

தமிழகத்தில் இன்றைய கொரோனா ரிலவரம் தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இன்று ஒரே நாளில் 4,807பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,65,714 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இன்று மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 88 ஆக பதிவான நிலையில் மொத்த உயிரிழப்பு 2403 ஆக உயர்ந்துள்ளது. இன்று இதுவரை இல்லாத அளவுக்கு தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சென்னையில் இன்று மட்டும் 1,219 பேருக்கு கொரோணா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.திருவள்ளுர் 370, செங்கல்பட்டு 323, வேலூர் 191, மதுரை 185, விருதுநகர் 179, குமரி 144, கோவை 144 தூத்துக்குடி 160 என இன்று நூறைத் தாண்டி தொற்று பதிவாகியுள்ளது.மேலும், இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 3,049ஆகும். இதனால் இதுவரை குணமானவர்களின் எண்ணிக்கை 1,13,856ஆக உயர்ந்துள்ளது.

 

இன்று மட்டும் 48,195 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


Leave a Reply