10 நிமிடங்கள் மட்டுமே உயிருடன் இருப்பதாக அழுத தருணம்..!
இன்னும் பத்து நிமிடங்கள் மட்டும் தான் நாம் வாழ போகிறேன் என்று தம்மிடம் தமது உதவியாளர் அழுதுகொண்டே கூறியதாக ஹாலிவுட் நடிகர் ஜிம் கெர்ரி நிகழ்ச்சி ஒன்றில் நினைவுகூர்ந்தார். ஜும் மூலமாக உரையாடுகிறார்.
2018 ஆம் ஆண்டு ஹவாய் தீவில் இருந்த போது அத்தீவின் மீது ஏவுகணை தாக்குதல் நடைபெற உள்ளதாக வதந்தி பரவியதாக தெரிவித்தார். உதவியாளர் தொலைபேசியில் இன்னும் பத்து நிமிடங்களை இருப்பதாக கதறி அழுததை அடுத்து வாய்ப்பு இருக்குமா என தன் கடற்கரை நோக்கி ஓடியதாக தெரிவித்தார்.
கடலை பார்த்தபடி நின்ற போது வாழ்க்கையின் மீது மீண்டும் நம்பிக்கை பிறந்தது என்றும் தமது வாழ்க்கையில் நிகழ்ந்த பல மகத்தான அனுபவங்களை நினைத்து கொண்டதாகவும் கூறினார். நல்லவேளையாக தகர்க்கப்படும் என்ற தகவல் வதந்தி ஆகவே முடிந்துவிட்டது என்றும் தெரிவித்தார்.






