பாரதி ராஜாவுக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்க தமிழ் பிரபலங்கள் கடிதம்..!

திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவுக்கு திரைத் துறையில் மிக உயர்ந்த தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று கமலஹாசன், மணிரத்னம், வைரமுத்து உள்ளிட்ட 50 சினிமா பிரபலங்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு அவர்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

 

தென்னிந்தியத் திரையுகில் புதிய அலையை தொடங்கி வைத்தவர் பாரதிராஜா என்று அறிமுகம் செய்த அவரது சாதனைகளையும் கடிதத்தில் பட்டியலிட்டுள்ளனர். ஆறு முறை தேசிய விருதை வென்றுள்ள பாரதிராஜா, பத்மஸ்ரீ விருதைப் பெற்றதையும் பிரபலங்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

எனவே 78 வயது பிறந்த நாளை கொண்டாடும் பாரதிராஜாவுக்கு மிக உயர்ந்த தாதா சாகிப் பால்கே விருது வழங்குவது பொருத்தமான கௌரவமாக இருக்கும் என்றும் கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

மூன்று பக்க கடிதத்தில் நடிகர்கள் தனுஷ், பார்த்திபன், சுகாசினி, இயக்குனர்கள் சேதுமாதவன், சேரன், பாண்டியராஜ், வெற்றிமாறன் மற்றும் கலைப்புலி தாணு, சிவசக்தி பாண்டியன் உள்ளிட்ட தயாரிப்பாளர்களும் கையெழுத்திட்டுள்ளனர். கவிஞர் வைரமுத்து பாரதிராஜாபெயரை பால்கே விருதுக்கு பரிந்துரைப்பதாக கவிதை வடிவில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


Leave a Reply