கடலூர் மாவட்ட திமுக எம்எல்ஏ சி.வெ.கணேசனுக்கு கொரொனா தொற்று இன்று உறுதி..!

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த திமுக எம்எல்ஏ சி.வெ.கணேசனுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. திமுகவில் மேலும் திமுக எம்எல்ஏ வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரொனா தொற்று உறுதியான நிலையில் சென்னை போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி.வெ.கணேசன் அந்தப் பகுதியில் கிராமப்புறங்களில் கொரொனா நிவாரண பணிகளை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு கொரொனா சோதனை நடத்தப்பட்டது. இன்று அதற்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று அவருக்கு பாசிட்டிவ் என தகவல் வெளியாகியுள்ளது.

 

தற்போது அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Leave a Reply