நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு மூச்சுதிணறல்..! கொரொனா தீவிர சிகிச்சை..!

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து குடும்பத்திற்கே கொரொனா பரிசோதனை செய்யப்பட்டது.

 

அபிஷேக் பச்சனின் மனைவியும், பாலிவுட் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மகள் ஆராத்யாவுக்கும் கொரொனா தொற்று இருப்பது கடந்த 13ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. கொரொனா வைரஸ் அறிகுறிகள் சிறிய அளவில் இருந்ததால் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.

 

இதனால் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் இருவரும் கடந்த சில நாட்களாக வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டனர். திடீரென ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மகளுக்கும் நள்ளிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரொனா தாக்கம் அதிகம் ஆனதால் இந்த மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இதையடுத்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா இருவரும் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply