அமெரிக்காவில் நாயின் தாக்குதலிலிருந்து தங்கையை காப்பாற்றிய ஆறு வயது சிறுவனுக்கு கேப்டன் அமெரிக்காவின் கேடயத்தை பரிசளிப்பதாக நடிகர் கிரிஸ் எவன்ஸ் தெரிவித்துள்ளார்.
செயன்னை நகரில் நாய் ஒன்றின் தாக்குதலில் இருந்து பிரிஜ்ஜவாக்கோ என்ற சிறுவன் தனது தங்கையை காப்பாற்றியதாகவும் இதில் முகத்தில் படு காயமடைந்த சிறுவனுக்கு 90 தையல் போடப்பட்டு உள்ளதாகவும் புகைப்படங்களுடன் சிறுவனின் தைரியத்தை பாராட்டி அவனது அத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு வைரலான நிலையில் கேப்டன் அமெரிக்கா திரைப்பட கதாபாத்திரத்தில் நடித்த கிரிஸ் எவன்ஸ் சிறுனுக்கு பாராட்டு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். சிறுவனின் தன்னலமற்ற வீரமான செயலுக்காக கேப்டன் அமெரிக்காவின் உண்மையான கவசத்தை பரிசாக அளிப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.