தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 4538 ஆகவும், 79 பேர் பலியானதாகவும் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளாவோர் எண்ணிக்கை கடந்த 3 நாட்களாக 4500-க்கும் மேலாக பதிவாகி வருகிறது. இன்றைய பாதிப்பு நிலவரம் தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,538 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இது நேற்றை விட சற்றே குறைவாகும். சென்னையில் நேற்று 1,157 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் அதிகரித்து 1243 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழப்பும் நேற்றை (69) விட அதிகரித்து 79 பேர் பலியாகியுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2315 ஆக உயர்ந்துள்ளது.
இன்று சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் அதிகபட்சமாக 263 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் 220, வேலூர் 183 , விருதுநகர் 196/திண்டுக்கல் 163, திருவண்ணாமலை 145,, செங்கல்பட்டு 125, குமரி 151, கோவை 141,தூத்துக்குடி 189,, நெல்லை 119, தஞ்சை 117, என பல்வேறு மாவட்டங்களில் தொற்று பாதிப்பு 100ஐ தாண்டி பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் சுமார் 48 ஆயிரம் பேருக்கு மேலாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு 1,60,907ஆக உயர்ந்துள்ள நிலையில், இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 3,391ஆகும்.
இதனால் இதுவரை குணமானவர்களின் எண்ணிக்கை 1,10,807ஆக உயர்ந்துள்ளது எனவும் தமிழகத்தின் மொத்த கொரோனா பாதிப்பில் சென்னையில் மட்டும் 51.18% எனவும் சுகாதாரத் துறை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.